இன்றைய வசனம் 10-02-25 | Today Bible Verse in Tamil | Tamil bible verse | Today's Bible Gospel

இன்றைய வசனம் 10-02-25 | Today Bible Verse in Tamil | Tamil bible verse | Today's Bible Gospel

#dailybibleverses #todaybibleverseintamil #todaysbibleverse #இன்றையநற்செய்திவாசகம் #இன்றையவசனம் #bibleverseoftheday #dailyBibleGospel #dailybibleverse #tamilbible #bibleverse #bible இன்றைய வசனம் | Today Bible Verse in Tamil 10-02-25 | நற்செய்தி வாசகம் | Start your day with the uplifting message from the Bible in Tamil. Hello Every One, Welcome to our You Tube Channel to watch more videos on Christian Songs, Christian Old and New Songs, Lyrical Videos, Jukebox, Prayers, Holy Rosary, Today's bible verses, Daily Gospel Text... Please Support and Subscribe our Channel. முதல் வாசகம் 00:00:00 பதிலுரைப் பாடல் 00:03:47 நற்செய்தி வாசகம் 00:06:01 மூன்றாவது திருவழிபாடு ஆண்டு பொதுக்காலம் 5வது வாரம் திங்கட்கிழமை 2025-02-10 பதிலுரைப் பாடல் பல்லவி: ஆண்டவர் தம் செயல்களைக் குறித்து மகிழ்வாராக திருப்பாடல்கள் 104:1-2,5-6,10-12,24,25 1 என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! என் கடவுளாகிய ஆண்டவரே! நீர் எத்துணை மேன்மைமிக்கவர்! நீர் மாண்பையும் மாட்சியையும் அணிந்துள்ளவர். 2 பேரொளியை ஆடையென அணிந்துள்ளவர்; வான்வெளியைக் கூடாரமென விரித்துள்ளவர்.- பல்லவி 5 நீவீர் பூவுலகை அதன் அடித்தளத்தின்மீது நிலைநாட்டினீர்; அது என்றென்றும் அசைவுறாது. 6 அதனை ஆழ்கடல் ஆடையென மூடியிருந்தது; மலைகளுக்கும் மேலாக நீர்த்திரள் நின்றது.- பல்லவி 10 பள்ளத்தாக்குகளில் நீருற்றுகள் சுரக்கச் செய்கின்றீர்; அவை மலைகளிடையே பாய்ந்தோடும்; 11 அவை காட்டு விலங்குகள் அனைத்திற்கும் குடிக்கத் தரும்; காட்டுக் கழுதைகள் தாகத்தைத் தீர்த்துக்கொள்ளும்; 12 நீருற்றுகளின் அருகில் வானத்துப் பறவைகள் கூடுகட்டிக்கொள்கின்றன; அவை மரக்கிளைகளினின்று இன்னிசை இசைக்கின்றன.- பல்லவி 24 ஆண்டவரே! உம் வேலைப்பாடுகள் எத்தணை எத்தணை! நீர் அனைத்தையும் ஞானத்தோடு செய்துள்ளீர்! பூவுலகம் உம் படைப்புகளால் நிறைந்துள்ளது.- பல்லவி 35 பாவிகள் பூவுலகினின்று ஒழிந்து போவார்களாக! தீயோர்கள் இனி இல்லாது போவார்களாக! என் உயிரே! நீ ஆண்டவரைப் போற்றிடு! அல்லேலூயா!- பல்லவி நற்செய்திக்கு முன் வசனம் மத் 4:23 அல்லேலூயா, அல்லேலூயா! இயேசு விண்ணரசு பற்றிய நற்செய்தியைப் பறைசாற்றினார்; மக்களிடையே இருந்த நோய் நொடிகள் அனைத்தையும் குணமாக்கினார். அல்லேலூயா. நற்செய்தி வாசகம் மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6:53-56 இயேசுவும் அவருடைய சீடர்களும் மறு கரைக்குச் சென்று கெனசரேத்துப் பகுதியை அடைந்து படகைக் கட்டி நிறுத்தினார்கள். அவர்கள் படகை விட்டு இறங்கிய உடனே, மக்கள் இயேசுவை இன்னார் என்று கண்டுணர்ந்து, அச்சுற்றுப்பகுதி எங்கும் ஓடிச் சென்று, அவர் இருப்பதாகக் கேள்விப்பட்ட இடங்களுக்கெல்லாம் நோயாளர்களைப் படுக்கையில் கொண்டு வரத் தொடங்கினார்கள். மேலும் அவர் சென்ற ஊர்கள், நகர்கள், பட்டிகள் அனைத்திலும் உடல் நலம் குன்றியோரைப் பொது இடங்களில் கிடத்தி, அவருடைய மேலுடையின் ஓரத்தையாவது அவர்கள் தொட அனுமதிக்குமாறு அவரை வேண்டினார்கள். அவரைத் தொட்ட அனைவரும் நலமடைந்தனர். இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி. கிறிஸ்துவே உமக்கு புகழ். Tamil Christian Songs, Tamil Christian songs lyrics, Tamil catholic songs, Tamil devotional songs, Tamil church songs, Christian devotional songs, Tamil jesus songs, Tamil rc songs, Old Christian songs, தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Velankanni matha songs, catholic songs, heart touching rc song in tamil, Jesus Songs in tamil , Madha Songs in tamil, RC Christian Songs, Devotional Song in Tamil, Christian devotional song, Christian melody song, tamil madha songs For any Query and Feedback, Raja Pannilan 9320924253 [email protected]