
Stomach Bloating | வயிறு உப்புசம் வீக்கம் | stomach bloating remedies in tamil
வயிறு உப்பசம் வயிறு வீக்கம் இது எதனால் ஏற்படுகிறது என்பதை பற்றியும் அதற்க்கு தீர்வு காண்பது பற்றியும் இப்போது பார்ப்போம் உடலில் வாய்வு உண்டாக இரண்டு காரணங்கள் இருக்கின்றன. ஒன்று, இரைப்பை மற்றும் சிறுகுடலில் செரிமானமாகாத சில உணவுப் பொருள்கள் பெருங்குடலில் உள்ள நல்ல பாக்டீரியாவால் உடைக்கப்படும்போது உண்டாகும் வாய்வு. மற்றொன்று, வாய்வழியாக உடலுக்குள் செல்லும் வெளிக்காற்று. இவை இரைப்பையிலிருந்து ஏப்பமாகவோ, குடலைச் சென்றடைந்ததும் ஆசனவாய் வழியாகவோ உடலிலிருந்து வெளியேற வேண்டும். அப்படி வெளியேறாமல் உடலுக்குள்ளேயே தங்கிவிடுவதால், வயிறு வீங்கி உப்புசம் ஏற்படுகிறது. வயிறு உப்பசம் ஏற்பட சில முக்கிய காரணங்கள் இருக்கின்றன அவைகளில் சில, 1 அளவுக்கு அதிகமா சாப்பிடுவது 2 சாப்பிடும்போது பேசுவது 3 அவசரமாகச் சாப்பிடுவது 4 உணவை மென்று சாப்பிடாமல் இருப்பது 5 காபி, டீ, ஜூஸ் 6 சாப்பிடும் பொது தண்ணீர் அதிக அளவில் குடிப்பது 7 வாய்வை உண்டாக்கும் உணவுப் பொருள்களை அதிகம் சாப்பிடுதல் எடுத்துகாட்டாக வாழைக்காய் மரவள்ளிக்கிழங்கு முட்டை பருப்பு வகைகள் 8 ஒரு வேளை உணவு உண்டதும் அடுத்த வேளை உணவு உண்ண அதிக இடைவெளி எடுத்துக்கொள்ளுதல் 9 போதுமான அளவு தண்ணீர் குடிக்காதது 10 மலம் மற்றும் சிறுநீரை அடக்குதல். 11 எண்ணெயில் பொரித்த இறைச்சி 12 மசாலா உணவுகள் சாப்பிடுதல். உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளாலும் வயிற்று உப்புசம் ஏற்படலாம். உப்புசத்தால் உண்டாகும் பிரச்சனைகள் வயிறு அல்லது அடிவயிறு வீங்குதல் வாய்வுத் தொல்லை சாப்பிட்டதும் அசௌகர்யமாக உணர்தல் வயிற்று இரைச்சல் வயிற்றுப்பிடிப்பு குமட்டல் இவைகளை எப்படி தவிர்க்கலாம் என்று பார்ப்போம் 1.தயிர் போன்ற உணவுகளை சாப்பிடவேண்டும் 2.உணவை நன்றாக மென்று சாப்பிட வேண்டும் 3.உணவுக்கு இடையில் தண்ணீர் அருந்துவதை தவிர்க்க வேண்டும் 4. மலம், சிறுநீர் தாமதிக்காமல் உடனடியாக கழித்துவிட வேண்டும். 5. நீரை நன்றாகக் காய்ச்சி, வடிகட்டி அருந்த வேண்டும் வீட்டு வைத்தியம் என்ன வென்று பார்ப்போம் 1.சீரகம், கருஞ்சீரகம் இரண்டையும் இடித்து பொடி செய்து அதனுடன் கருவேப்பிலை, வெங்காயம், வெள்ளைப்பூண்டு, கிராம்பு ஆகியவற்றை சேர்த்து தயிர் கலந்து சாப்பிட்டு வந்தால் வயிற்று உப்புசம் குறையும் . 🔹️ சாதம் வடிப்பதால் கிடைக்கும் கஞ்சியில் சிறிது மஞ்சள் தூள்,சிறிது பனங்கல்கண்டு சேர்த்து சூட்டோடு குடித்து வர வயிற்று உப்பசம் நீங்கும். 🔹️ இரண்டு வெற்றிலையில் சிறிதளவு ஓமம், தேன் சேர்த்து மடித்து மென்று விழுங்கினால் வயிறு உப்பசம் நீங்கும். 🔹️ துவரம் பருப்பு சாம்பாருக்குப் பதிலாக, சிறுபாசிப்பருப்பு சாம்பார் வைத்து சாப்பிடவும். 🔹️ சாப்பிட்டு முடித்ததும் இரண்டு டம்பளர் சீரகத்தண்ணீர் அருந்தவும். இரவில் கண்டிப்பாக வாழைப்பழம் சாப்பிடவும். 🔹️ சுக்கு கலந்த வெந்நீரை அடிக்கடி குடித்து வந்தால் வயிற்று உப்பசம் நீங்கும். எந்த உணவைச் சாப்பிட்டால் வாய்வு அதிகரிப்பதாகத் தோன்றுகிறதோ, அதை முடிந்தவரை குறைத்துக்கொள்ள வேண்டும். தொல்லை தொடர்ந்தால் வந்திருக்கும் பிரச்சனைக்குக் காரணம் உணவா, நோயா என்று மருத்துவரிடம் பரிசோதித்து, சிகிச்சை பெறுவது இதைத் தீர்க்க உதவும்.