Sunday Second Service | 09 june 2024 | WORSHIP  Pr. S. Abraham Francis | LIVE @TGA Church - Tiruppur

Sunday Second Service | 09 june 2024 | WORSHIP Pr. S. Abraham Francis | LIVE @TGA Church - Tiruppur

#abrahamfrancis #tgachurch #sundayservice For Prayer PASTOR : S.Abraham francis - Trinity Gospel Assembly Church For Prayer & Support : Address : 4/128 AVS Garden, Ranga Nagar, Kangayam road, Nachipalaiyam, Tirupur - 641606. Mobile : 8637674907, 9884076013 E-mail : [email protected] #Thalai Nimira Seithaar தலை நிமிர செய்தார் என்னை உயர்த்திவிட்டார் இனி நான் கலங்குவதில்லையே பெலன் அடைய செய்தார் என்னை மகிழ செய்தார் இனி என்றும் பயமெனக்கில்லையே கிருபையால் எல்லாம் அருளினார் கிருபையால் என்னை உயர்த்தினார் – 2 நம் கர்த்தர் நல்லவரே – 2 – தலை நிமிர சிலுவையில் எந்தன் சிறுமையை சிதைத்திட்டார் இராஜனே வெறுமையை வேரோடு அறுத்திட்டார் வெற்றியின் தேவனே கைகளில் பாய்ந்த ஆணியால் என் கரம் பிடித்தாரே இரத்தம் பாய்ந்த தம் காலினால் என்னை நடக்க செய்தாரே நம் கர்த்தர் நல்லவரே-2 குகைதனில் ஒளிந்து கிடந்தேனே அரண்மனை தந்தாரே வெட்கத்தை அவர் மாற்றினார் நம்பினேன் விடுவித்தார் எதிரிகள் முன் உயர்த்தினார் என் தலையை நிமிர செய்தார் உத்தமம் அவர் வார்த்தைகள் செய்கைகள் சத்தியம் நம் கர்த்தர் நல்லவரே – 2 – தலை நிமிர #Aarathipen என் தேவைகளை காட்டிலும், என் தேவன் பெரியவரே என் சூழ்நிலையை பார்க்கிலும், என் ரட்சகர் பெரியவரே ஆராதிப்பேன், உம்மை ஆராதிப்பேன் ஆராதிப்பேன், எந்தன் வாழ்நாளெல்லாம் 1.தண்ணீரை ரசமாக மாற்றி, என் வெறுமையை நிறைவாக்கினீரே வெட்கத்தின் விளிம்பிற்கு சென்றும், என்னை நிறைவோடு மீட்டெடுத்தீரே 2.எதிரான சூழ்ச்சியை உடைத்தே, என் எதிரியை மேற்கொண்டீரே நான் தலை குனிந்த இடத்தில் எல்லாம், என் தலை உயர்த்தி வைத்தீரே 3.கோணலை நேராக மாற்றி, பள்ளத்தை மேடாக்கினீரே திறக்காத கதவுகள் எல்லாம், உம் கிருபையால் திறந்திட்டதே #en Unarvinilae Kalanthavare என் உணர்வினிலே கலந்தவரே என் நினைவினிலே நிற்பவரே என் கனவினிலே வருபவரே என் இதயத்திலே நிறைந்தவரே உம்மை ஆராதிக்கின்றேன் ஐயா இயேசுவே என் உறவினில் கலந்து தந்தையானீர் ஐயா என் வாழ்வினில் இணைந்து தலைவனானீர் ஐயா என் நாவினில் இசைந்து ஒன்றாய் கலந்தீரையா என் துயரத்தில் கலந்து ஒளஷதமானீர் ஐயா என் தனிமையில் இணைந்து துணையாய் வந்தீரையா என் பயணத்தில் இணைந்து பாதை காட்டீனீரே