
உடலில் இரத்தத்தை அதிகரிக்கும் உணவுகள் | blood increasing foods in tamil
இன்றைக்கு, நிறைய பேருக்கு ரத்தம் தொடர்பான பிரச்னைகள் அதிகரித்து வருகின்றன’ என்கிறது சமீபத்திய ஓர் ஆய்வு. உணவின் மூலம் ரத்தம் உற்பத்தியாவதில்லை. உணவில் இருக்கும் இரும்புச்சத்தும் ரத்தம் உருவாக ஒரு காரணம். ரத்தத்தில் இருப்பது, ஹீமோகுளோபின். ‘ஹீம்’ என்றால் ‘இரும்பு’ என்று அர்த்தம். அது நமக்கு உணவின் மூலமாகக் கிடைக்கிறது. உணவில் இரும்புச்சத்து அதிகமாக இருந்தால், ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையும் அதிகமாக இருக்கும்.