Bachelor Mutton Curry Recipe # mutton # non-veg must try

Bachelor Mutton Curry Recipe # mutton # non-veg must try

மட்டன் குழம்பு செய்முறை தேவையான பொருட்கள்: எண்ணெய் – தேவையான அளவு சோம்பு – 1 டீஸ்பூன் வெங்காயம் – 5 (நறுக்கியது) இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 டேபிள்ஸ்பூன் தக்காளி – 5 (நறுக்கியது) மட்டன் – 1 and half கிலோ உப்பு – தேவையான அளவு மஞ்சள்தூள் – ½ டீஸ்பூன் கிராம மசாலா – 3 டீஸ்பூன் வீட்டு தயாரிப்பு மிளகாய்த்தூள் – 4 டீஸ்பூன் தண்ணீர் – 2 கிளாஸ் கருவேப்பில்லை – சிறிதளவு கொத்தமல்லி – சுவைக்கேற்ப செய்முறை: குக்கரில் எண்ணெய் ஊற்றி சூடானதும் சோம்பு சேர்த்து வறுக்கவும். நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வரும் வரை வதக்கவும். இஞ்சி-பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்றாக வதக்கி, நல்ல வாசனை வந்ததும் தக்காளி சேர்க்கவும். தக்காளி நன்றாக விழுந்தவுடன் மட்டன், உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து 5 நிமிடம் வதக்கவும். பின்னர் கிராம மசாலா மற்றும் மிளகாய்த்தூள் சேர்த்து நன்றாக கிளறவும். 2 கிளாஸ் தண்ணீர் சேர்த்து, குக்கரை மூடி மிதமான தீயில் 10 விசில் வரும் வரை குக்கர் வைத்துக்கொள்ளவும். அழுத்தம் தணிந்த பிறகு கருவேப்பில்லை, கொத்தமல்லி சேர்த்து கலக்கவும். சூடாக சாதம், ரொட்டி அல்லது தோசைக்காக பரிமாறலாம்!