
2022 | உருகாயோ மனமே | பிரதிஷ்டை கீத ஆராதனை | CSI Christ Church Samadhanapuram
Lyric உருகாயோ மனமே உந்தன் ஆண்டவர் சிதைந்த கோலமாய் கல்வாரி மேட்டில் நடந்து போகையில் முள்ளின் கிரீடம் வதைக்கும் முகத்துடன் பாதம் நோக பயணமாக சாவை வெல்லும் போர்களத்தில் அமுத விழியாய் எருசலேமின் மாதரெல்லாம் கதறுகையில் ஆயுள் ரேகையின் நடுவினிலே ஆணி கொண்டே அறைந்தனரே தாயின் கண் முன் தவித்த வாயால் தாகம் என்றே உரைக்கின்றார் கற்றூணிலே அவரை கட்டி வைத்தே கசைகளினால் அடித்தாரே உற்றார் உறவார் எவரும் இன்றியே அனாதை போல் ஏசுவும் நின்றாரே இந்த பரிதாபம் எதற்காக பாவியே உனக்காக இதை அறிவாயோ அறிவாயோ அறிவாயோ மனமே ஓடிப்போனார் சீடரெல்லாம் உடைந்திங்கே தேவன் உள்ளம் வாடிப்போன மலரைப்போலே தரையின் மீதே விழுகின்றார் ஏர் பூட்டியே உழுத நிலம் போலே ஏசுவின் மேனி மாறினதே ஊர் கூடியே செய்த அநியாயம் கொடியனை விடுதலை ஆக்கியதே இந்த நிலை எல்லாம் எதற்காக பாவியே உனக்காக இதை மறந்தாயோ துறந்தாயோ பிரிந்தாயோ மனமே Song name : Urugayo Manamae Featuring Writer & Music : Christy BGM Lead - Farry Chords - Paultus Rhythm - Santhosh Vocals : Daniel Jacob, Thomson Rajarathinam, Jubal Giftus Merwyn, Ammiel Malcham Moses, Jevin Abel, Benesra, Allwin John, Sam Jacob, Jim Elliot, Rohit Giftson Daniel, Mukesh, Richard Kingsly, Gnana Sugirthan, Victor, Santhosh, Ruban Singh, Lazarus. Videography & Edit : Skylark studios, Tirunelveli