
Christmas Choir/Athisayam seiyum /அதிசயம் செய்யும்/All Saints Church,Trichy/Carol Service 18/12/2022
Athisayam seiyum / அதிசயம் செய்யும் Christmas Church Choir All Saints Church, Trichy Carol Service on 18/12/2022 Lyrics Suresh Frederick Tune Matthew Mathuselah அதிசயம் செய்யும் இறைமகன் இயேசு அற்புதமாய் உதித்தார் ஆ! இதென்ன ஆச்சர்யம்... அகிலம் மகிழ உதித்தார் புகழ்ந்து பாடுங்கள், போற்றி பாடுங்கள்! உன்னதத்தில் மகிமை! மகிழ்ந்து பாடுங்கள், உயர்த்தி பாடுங்கள்! உன்னதருக்கே மகிமை! 1. தூதர்களே துதியுங்கள் (துதியுங்கள்) துதிகளின் நடுவில் பிறந்தார் தண்ணீரை இரசமாய் மாற்றினாரே நல்லவர் அற்புதம் செய்வாரே நண்பர்களே பாடுங்கள்! அன்பர்களே பாடுங்கள்! துதிகளின் நடுவில் பிறந்தார்! - புகழ்ந்து 2. மேய்ப்பர்களே மகிழுங்கள் (மகிழுங்கள்) மகிழ்ச்சியில் நடுவில் பிறந்தார் தண்ணீரின் மேலேயே நடந்தாரே அற்புதம் எனக்கு செய்வாரே நண்பர்களே பாடுங்கள்! அன்பர்களே பாடுங்கள்! மகிழ்ச்சியில் நடுவில் பிறந்தார்! - புகழ்ந்து 3. ஞானியரே பணியுங்கள் (பணியுங்கள்) பணிதலின் நடுவில் பிறந்தார் காற்றையும் கடலையும் அதட்டினாரே வல்லவர் அற்புதம் செய்வாரே நண்பர்களே பணியுங்கள்! அன்பர்கர்களே பணியுங்கள்! பணிதலின் நடுவில் பிறந்தார்! – புகழ்ந்து Lyrics: Dr Suresh Frederick Tune: Matthew Methselah