
மறையுரை சிந்தனை / Daily Gospel Reflection /29 September 2025 / #jesus #bible #todaysgospelreflection
Daily Reflection in Tamil. 29 செப்டம்பர் 2025, பொதுக்காலம் 26ஆம் வாரம் - திங்கள் தூய மிக்கேல், கபிரியேல், ரபேல் - அதிதூதர்கள் விழா நற்செய்தி வாசகம் கடவுளின் தூதர்கள் மானிடமகன்மீது ஏறுவதையும் இறங்குவதையும் காண்பீர்கள். ✠ யோவான் எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 47-51 அக்காலத்தில் நத்தனியேல் தம்மிடம் வருவதை இயேசு கண்டு, “இவர் உண்மையான இஸ்ரயேலர், கபடற்றவர்” என்று அவரைக் குறித்துக் கூறினார். நத்தனியேல், “என்னை உமக்கு எப்படித் தெரியும்?” என்று அவரிடம் கேட்டார். இயேசு, “பிலிப்பு உம்மைக் கூப்பிடுவதற்கு முன்பு நீர் அத்திமரத்தின் கீழ் இருந்தபோதே நான் உம்மைக் கண்டேன்” என்று பதிலளித்தார். நத்தனியேல் அவரைப் பார்த்து, “ரபி, நீர் இறைமகன்; நீரே இஸ்ரயேல் மக்களின் அரசர்” என்றார். அதற்கு இயேசு, “உம்மை அத்தி மரத்தின் கீழ் கண்டேன் என்று உம்மிடம் சொன்னதாலா நம்புகிறீர்? இதை விடப் பெரியவற்றைக் காண்பீர்” என்றார். மேலும் “வானம் திறந்திருப்பதையும் கடவுளின் தூதர்கள் மானிடமகன் மீது ஏறுவதையும் இறங்குவதையும் காண்பீர்கள் என மிக உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்” என்று அவரிடம் கூறினார். ஆண்டவரின் அருள்வாக்கு. Please do like, share and subscribe!