
இன்றைய திருப்பலி வாசகங்கள் | Saturday August 10, 2024 | Today's Gospel Reading | Tamil Mass Readings
Tamil Catholic Mass Readings. ஆகஸ்ட் 10, 2024 முதல் வாசகம்: இரண்டாம் கொரிந்தியர் 9:6-10 பதில் சங்கீதம்: சங்கீதம் 112: 1-2, 5-6, 7-8, 9 அல்லேலூயா: யோவான் 8: 12bc நற்செய்தி: யோவான் 12: 24-26 மனமிரங்கிக் கடன் கொடுக்கும் மனிதர் நன்மை அடைவர். முதல் வாசகம் முகமலர்ச்சியோடு கொடுப்பவரே கடவுளின் அன்புக்கு உரியவர். திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 9: 6-10 சகோதரர் சகோதரிகளே, குறைவாக விதைப்பவர் குறைவாக அறுவடை செய்வார். நிறைவாக விதைப்பவர் நிறைவாக அறுவடை செய்வார். இதைத் தெரிந்து கொள்ளுங்கள். ஒவ்வொருவரும் தம்முள் தீர்மானித்தபடியே கொடுக்கட்டும். மனவருத்தத்தோடோ கட்டாயத்தினாலோ கொடுக்க வேண்டாம். முகமலர்ச்சியோடு கொடுப்பவரே கடவுளின் அன்புக்கு உரியவர். கடவுள் உங்களை எல்லா நலன்களாலும் நிரப்ப வல்லவர். எந்தச் சூழ்நிலையிலும் எப்போதும் தேவையானதெல்லாம் உங்களுக்குத் தருவார்; அனைத்து நற்செயல்களையும் செய்வதற்குத் தேவையானது எல்லாம் உங்களுக்கு மிகுதியாகவே தருவார். “ஒருவர் ஏழைகளுக்கு வாரி வாரி வழங்கும்போது அவரது நீதி என்றென்றும் நிலைத்திருக்கும்” என்று மறைநூலில் எழுதியுள்ளது அல்லவா! விதைப்பவருக்கு விதையையும், உண்பதற்கு உணவையும் வழங்குபவர், விதைப்பதற்கு வேண்டிய விதைகளை வழங்கி அவை முளைத்து வளரச்செய்து அறச்செயல்களாகிய விளைச்சலை மிகுதியாகத் தருவார். ஆண்டவரின் அருள்வாக்கு. இறைவனுக்கு நன்றி. நற்செய்தி வாசகம் கோதுமை மணி மடிந்தால்தான் மிகுந்த விளைச்சலை அளிக்கும். ✠ யோவான் எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 24-26 அக்காலத்தில் இயேசு தம் சீடர்களுக்குக் கூறியது: “கோதுமை மணி மண்ணில் விழுந்து மடியாவிட்டால் அது அப்படியே இருக்கும். அது மடிந்தால்தான் மிகுந்த விளைச்சலை அளிக்கும் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். தமக்கென்றே வாழ்வோர் தம் வாழ்வை இழந்துவிடுவர். இவ்வுலகில் தம் வாழ்வைப் பொருட்டாகக் கருதாதோர் நிலைவாழ்வுக்குத் தம்மை உரியவராக்குவர். எனக்குத் தொண்டு செய்வோர் என்னைப் பின்பற்றட்டும். நான் இருக்கும் இடத்தில் என் தொண்டரும் இருப்பர். எனக்குத் தொண்டு செய்வோருக்குத் தந்தை மதிப்பளிக்கிறார்.” ஆண்டவரின் அருள்வாக்கு. கிறிஸ்துவே உம்மக்கு புகழ். _________________________________________________________________________ today bible verse in tamil Daily bible reading catholic bible verse in Tamil today's bible reading mass readings for today catholic bible reading for today today's mass readings today's reading catholic bible reading for today bible readings for today catholic readings for today daily mass readings for today today's bible verse in tamil today's catholic readings daily mass readings bible tamil catholic mass readings for today tamil bible reading today bible reading today's reading catholic mass bible reading bible reading in tamil bible reading today bible vasanam in tamil catholic daily reflections catholic readings today catholic today's reading daily bible reading #TodayBibleVerse #tamil #Todayverse #இன்றையவேதவசனம் இன்றைய வசனம் | Today Bible Verse in Tamil and English | Today bible words in Tamil and English | Today bible vasanam in tamil and English | Today Bible reading in tamil and English | Today Promise #TodayBibleVerse #TodayBibleWords #இன்றையவசனம் #BibleVerseForToday #HolyBibleVerses #BibleVerses #Promiseverse #Promiseoftheday #BibleVerses