
மறையுரை சிந்தனை / Daily Gospel Reflection /26 September 2025 / #jesus #bible #todaysgospelreflection
Daily Reflection in Tamil. 26 செப்டம்பர் 2025, பொதுக்காலம் 26ஆம் வாரம் - வெள்ளி நற்செய்தி வாசகம் உடலை மட்டும் கொல்பவர்களுக்கு அஞ்ச வேண்டாம். ✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 28-33 அக்காலத்தில் இயேசு தம் திருத்தூதர்களுக்குக் கூறியது: “ஆன்மாவைக் கொல்ல இயலாமல், உடலை மட்டும் கொல்பவர்களுக்கு அஞ்ச வேண்டாம். ஆன்மாவையும் உடலையும் நரகத்தில் அழிக்க வல்லவருக்கே அஞ்சுங்கள். காசுக்கு இரண்டு சிட்டுக் குருவிகள் விற்பதில்லையா? எனினும் அவற்றுள் ஒன்றுகூட உங்கள் தந்தையின் விருப்பமின்றித் தரையில் விழாது. உங்கள் தலைமுடியெல்லாம் எண்ணப்பட்டிருக்கின்றது. சிட்டுக் குருவிகள் பலவற்றைவிட நீங்கள் மேலானவர்கள். எனவே அஞ்சாதிருங்கள். மக்கள் முன்னிலையில் என்னை ஏற்றுக் கொள்பவரை விண்ணுலகில் இருக்கும் என் தந்தையின் முன்னிலையில் நானும் ஏற்றுக்கொள்வேன். மக்கள் முன்னிலையில் என்னை மறுதலிப்பவர் எவரையும் விண்ணுலகில் இருக்கிற என் தந்தையின் முன்னிலையில் நானும் மறுதலிப்பேன்.” ஆண்டவரின் அருள்வாக்கு. Please do like, share and subscribe!